இன்றைய ராசிபலன் (25.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (25.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி பலிக்கும். செலவு அதிகரிக்கும் தேவைக்கேற்ற வரவு வரும். பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும். லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மதியத்தில் இருந்து அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இன்று தவிர்க்கவும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். திருவாதிரை: முடிவு செய்திருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். நண்பர்கள் உதவியால் பிரச்னை விலகும். புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு உயரும். பூசம்: வியாபாரம் முன்னேற்றம் அடைமடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆயில்யம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

சிம்மம்

மகம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலை நடக்கும். உத்திரம் 1: நெருக்கடி மதியம் நீங்கும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம். அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக்குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம். சித்திரை 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வேலைகளை போராடி முடிப்பீர். பயணத்தில் நன்மை அதிகரிக்கும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3: செயல்களில் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மையில் முடியும்.

விருச்சிகம்

விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சியில் போராடி வெற்றி அடைவீர். அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நவீன பொருட்கள் வாங்குவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

தனுசு

மூலம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி சரிசெய்வீர். விருப்பம் நிறைவேறும். உற்சாகத்துடன் செயல்படுவீர். உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சங்கடம் தோன்றும். பேச்சில் கவனம் அவசியம்.

மகரம்

உத்திராடம் 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை. திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். அவிட்டம் 1,2: மற்றவர் வார்த்தைகளைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

கும்பம் 

அவிட்டம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்ப்புகளை சமாளிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சதயம்: எடுத்த வேலையை நடக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். நினைத்ததை அடைவீர். செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

மீனம்

பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். சங்கடம் விலகும். தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர். உத்திரட்டாதி: குடும்ப நெருக்கடி குறையும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். மனம் தெளிவடையும். ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்டம் தேடிவரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!