துணை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி - மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#Fraud
Thamilini
3 hours ago
தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதி மோசடி செய்யும் ஒருவர் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ள அவர், அத்தகைய நபர்களுடன் பணம் அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாக காவல்துறை அல்லது தொடர்புடைய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.