சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் திருகோணமலையில் கலந்துரையாடல்!
சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோரின் தலைமையில், திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா துறை பற்றி உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சிறப்பு கலந்துரையாடல் (26) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது, சுற்றுலா துறையில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாகாண சுற்றுலா துறை பணியகத்தின் தலைவர் பிரியந்த மலவன்னகொட மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட பல நிறுவனத் தலைவர்கள்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், சுற்றுலா துறை பிரதி அமைச்சர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் மாகாண சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் பிரியந்த மலவன்னகொட ஆகியோர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான எல்ஸ்வத்த, இறக்கக்கண்டி, நிலாவெளி, சலப்பையாரு, குச்சவெளி ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களை ஆய்வு செய்யும் கண்காணிப்பு விஜயத்திலும் பங்கேற்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்