இழுபறியில் உள்ள பொதுச் செயலாளர் நியமனம் - 08 அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Election Commission
#srilankan politics
#parties
Thamilini
4 hours ago
அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுக்கு, பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி , ஐக்கிய மக்கள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்டவையே பொதுச் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரு அணிகளும் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் உரிமை கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.