கரையோர ரயில் சேவைகள் தாமதம்!

#SriLanka #Train #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
கரையோர ரயில் சேவைகள் தாமதம்!

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று (31) மற்றும் நாளை (01) தாமதமாகக் கூடும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த ரயில் நிலையங்களுக்கிடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் பணிகள் காரணமாக இத் தாமதம் ஏற்படுக்கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இரு நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!