இந்தோனேசியாவில் திருமணத்தை மீறிய உறவு - 140 சவுக்கடிகளை பெற்ற தம்பதி!

#SriLanka #Indonesia #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
இந்தோனேசியாவில் திருமணத்தை மீறிய உறவு - 140 சவுக்கடிகளை பெற்ற தம்பதி!

இந்தோனேசியாவில் ஒரு தம்பதியனருக்கு ஷரியா சட்டத்தை மீறியதற்காக 140 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டதற்காகவும், மது அருந்தியதற்காகவும் தம்பதியினர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது.

ஆச்சே மாகாணத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தண்டனை பெற்ற 21 வயதுடைய பெண் இடையில் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும், தண்டனையை நிறைவேற்றிய பெண் அதிகாரிகள் அழுதுகொண்டே அவரை தொடர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. 

ஆச்சேவின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் கீழ், திருமணத்திற்குப் புறம்பான உடலுறவுக்கு 100 சவுக்கடிகளும், மது அருந்துவதற்கு 40 சவுக்கடிகளும் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!