இன்றைய ராசிபலன் (06.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (06.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பரணி: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை 1: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்கள் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். வேலையில் கவனம் தேவை. ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம், பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு லாபம் காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும். புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பர்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். ஆயில்யம்: சகோதரர் உதவியால் உங்கள் வேலைகள் முடியும். நெருக்கடி நீங்கும்.

சிம்மம்

மகம்: வரவால் வளம் காணும் நாள். வியாபார பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூரம்: தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். கடன் பிரச்னை குறையும். உத்திரம் 1: பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அஸ்தம்: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். நிம்மதி உண்டாகும். சித்திரை 1,2: முயற்சி வெற்றியாகும். பிறரின் பிரச்னைகளுக்கு நீங்கள் முன்நின்று தீர்வு காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சுவாதி: செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர். விசாகம் 1,2,3: மனக்கவலை ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். அனுஷம்: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். கேட்டை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

மூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நன்மையாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சதயம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வேலையில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: மனதில் குழப்பம் தோன்றும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!