சீமானின் உண்மை முகத்தை உரித்து நிரூபித்து காட்டிய ஈழ ஆதரவாளர் கனடா கதிர்காமனாதன்

#SriLanka #Tamil Nadu #Politician #Seeman #Politics
Prasu
2 hours ago
சீமானின் உண்மை முகத்தை உரித்து நிரூபித்து காட்டிய ஈழ ஆதரவாளர் கனடா கதிர்காமனாதன்

ஈழத்தமிழன் ஒரு வடிகட்டின முட்டாள் என தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் சீமான் ஐயாவும் நானும் 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது வட்டுவாகல் பாலத்துக்கு பக்கத்தில் இருந்த ஸ்ரூடியோவில் எடுத்துக்கொண்ட படம் இது.

எடிட் பண்ணினது எண்டு எரிச்சல் படுத்தாதேங்க. நம்பிக்கை இல்லையெண்டா அண்ணனிட்டயே கேளுங்க. ஹஹ்ஹ, ஹஹ்ஹ, ஹஹ்ஹ எண்டு சிரிச்சிற்று ஓம் எண்டுவார்.

சீமானின் தமிழ் உணர்வும், தமிழ் அறிவும், ஞாபகசக்தியும் பலரைப்போல் என்னையும் கட்டிப்போட்டது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

அவர் கனடா வந்த சமயம் அவரை மாண்டரினுக்கு அழைத்துச் சென்ற கூட்டத்தில் அடியேனும் அடக்கம். அவருடைய இராமேஸ்வரம் உரையை நான் இப்போதும் கேட்பதுண்டு.

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசுகின்றாய் நாள்தோறும் தமிழுக்காய் நீ சுவாசிக்கின்றாய்" என தொடங்கி கவிதைகளும் எழுதிக் கொண்டாடியவன் தான்.

சீமான் விலைபோய் நாளாச்சு. பெரியார் சொல்கின்றார், நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் அவசியம் இல்லையென்று.

அவர் சொன்ன ஓரிரு விடயங்களில் எனக்கும் உடன்பாடில்லை தான். பல விடயங்கள் பிடிப்பானவை. தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் என அவரே சொன்னதால் ஒரு சிக்கலும் இல்லை. 

ஆனால், பிரபாகரனே பெரியாரையும் அண்ணாவையும் பின்பற்றுபவர் எனவும், பின்னர் அண்ணரை சந்தித்த பின்னரே பெரியாரை நான் விமர்சிக்கின்றேன் என நான் பிதற்றுவதில்லை.

2009க்கு பின்னரே பல மேடைகளில் பெரியாரை தூக்கிச்சுமந்தவர் இந்த சீமான். ஈழத்தமிழ் பெண்ணை தான் கல்யாணம் செய்வேன் என முழக்கமிட்டவர் இந்த சீமான். 

நல்ல காலம் ஒரு ஈழத்தமிழச்சி தப்பீற்றாள். அட கிரகத்த, ஒரு தமிழ்ப் பெண்ணையாவது கட்டி இருக்கலாம். தன்னை விட வயதில் குறைந்த ஒரு பெண்ணின் மகளை, ஈழத்தையும் பிரபாகரனையும் புறந்தள்ளிய ஒருவனின் மகளை மணம் முடித்தான் இந்த சீமான். 

இன்னொரு பெண்ணை தெருவில் இழுத்து விட்டவன் எல்லாம் பிரபாகரன் பற்றி பேச அருகதையற்றவன். நான் திராவிட எதிரி என கத்திய காலம் எல்லாம் மலையேறி நாளாச்சு. தி.மு.க.வை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்யும் விஜயை எதிர்ப்பதே முழுநேர கொள்கையாய் இப்போது வைத்திருக்கும் சீமான் இப்பெல்லாம் சிரித்து கடக்கும் ஒரு பொருளாகவே உள்ளார். சீமான் பிரபாகரனை தூக்கிச் சுமக்கின்றார் அதனால் நாம் அவரில் அன்பு கொண்டுள்ளோம் என பிதற்றும் பலருக்கு தெரியவில்லை, அவர் பிரபாகரனை விற்றுத்திண்டு நாளாச்சு என.

கூகிளிலும் யூரியூப்பிலும் ஈழத்தமிழர், தலைவர், தமிழ் தேசியம் என அடிச்சு பாருங்க. யாருடைய முகம் வந்து நிக்குமென. ஒரு தேசிய இனத்தின் தலைவன், போராட்ட உச்சத்தில் பத்து வகையான மாமிச உணவுடனும் மான் ஊறுகாயுடனும் எனக்கு பரிமாறினான், அதை பார்த்து குறிப்பெடுக்க ஒரு போராளியையும் உத்தரவிட்டான் என சொல்லும் கேவலத்தை உணர்ச்சியாக பார்க்கும் ஈழத்தமிழனை நினைத்தால் தான் பாவமாக இருக்கும். காலம் அனைவருக்கும் இவனின் விலைபோன முகத்தை கிழித்து காட்டும்.

இந்த 2026 தேர்தலே அதற்கு சாட்சியாக இருக்கும். ஈழத்தமிழரின் உணர்ச்சியை காசாக்கி, ஊர்பிள்ளைகளை மாடுமேய்க்க சொல்லிவிட்டு, ஊர்ப்பிள்ளைகளை தமிழில் படிக்க சொல்லிவிட்டு, தன் பிள்ளைகளை ஆங்கில முறைக்கல்வி படிக்க வைக்கும் இவன் போன்றவர்கள் தான் தற்குறி எனும் பதத்திற்கு சொந்தமானவர்கள்.

ஈழத்தில் இன்றும் வாழ்வாதார சிக்கலில் அழுது துடிக்கும் ஏராளம் முன்னாள் போராளிகளும் குடும்பங்களும் உண்டு. ஆதரவற்ற முதிர்கன்னிகளும் விதவைத் தங்கைகளும் உண்டு. அதனை பார்க்க வக்கில்லாமல், எங்கிட ஆக்களிட பாணியில் சொன்னால், ஒரு வடக்கனின் பேச்சுக்கு மதிமயங்கி அவன் வாழ்க்கையை சொகுசாக்கும் எம்மவர்களை நினைக்க.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!