இன்றைய ராசிபலன் (11.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (11.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடைகள் தோன்றும். பரணி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். இயந்திரப் பணிகளில் கவனம் தேவை. கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். வாக்கு வாதத்தை தவிர்ப்பது அவசியம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். எடுத்த வேலைகளை நடத்தி ஆதாயம் காண்பீர்கள். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். செல்வாக்கு உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் கூடும். பூசம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர் ஆதரவால் வேலைகள் நடக்கும். ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

மகம்: எதிர்பார்ப்புகள் இன்று தள்ளிப்போகும். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும். பூரம்: வேலைப்பளு அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது அவசியம். உத்திரம் 1: முயற்சியில் தடை தோன்றும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடி ஏற்படும். 

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். சித்திரை 1,2: உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்தது நடந்தேறும்.

துலாம்

சித்திரை 3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: அலைச்சல் ஏற்படும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மையாகும். அனுஷம்: உங்களது தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். கேட்டை: நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

தனுசு

மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பூராடம்: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். பண விவகாரத்தில் எச்சரிக்கை தேவை. உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: யோகமான நாள். வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திருவோணம்: நண்பர்களின் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். அவிட்டம் 1,2: உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நவீன பொருட்கள் வாங்குவீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். உங்களது முயற்சி வெற்றியாகும். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் நன்மை அடைவர். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பண நெருக்கடி நீங்கும்.

மீனம்

பூரட்டாதி 4: கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உறவினர் வீடுதேடி வருவர். உத்திரட்டாதி: வியாபாரத் தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!