பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனின் இந்திய பயணம் உறுதி

#India #France #President #Visit
Prasu
4 months ago
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோனின் இந்திய பயணம் உறுதி

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17ம் திகதி இந்தியா செல்ல உள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.

இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4