சம்பளம் வாங்காமல் நடிகை தமன்னா நடித்துள்ள இந்தி திரைப்படம்

#Cinema #Actor #Actress #Salary #Movie
Prasu
4 months ago
சம்பளம் வாங்காமல் நடிகை தமன்னா நடித்துள்ள இந்தி திரைப்படம்

காதலர் தினத்தையொட்டி வெளியாகும் 'ஓ ரோமியோ' என்ற இந்திப்படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்திடிம்ரி நடித்துள்ளனர்.

மேலும் விக்ராந்த் மாஸ்ஸி, திஷாபதானி, தமன்னா மற்றும் நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் இயக்குநர் விஷால் பரத்வாஜிற்காக சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.

சமீப காலங்களில் திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்ற நிலையில் இந்த இரு நடிகர்களின் இந்த செயல் ரசிகர்களிடையே பேசும் பொருளாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4