இன்றைய ராசிபலன் (12.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்
அசுவினி: வேலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுங்கள். இயந்திரப்பணியாளர்களுக்கு எச்சரிக்கை தேவை. கார்த்திகை 1: மதியம்வரை மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். அதன்பிறகு சரியாகும்.
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். ரோகிணி: வேலையில் இருந்த சங்கடம் நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: பயணத்தால் ஆதாயம் உண்டாகும். நண்பரால் வேலைகள் நடந்தேறும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்வு காண்பீர். திருவாதிரை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உறவினர்கள் உதவி கேட்பர். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கடகம்
புனர்பூசம் 4: உங்கள் திறமை வெளிப்படும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
சிம்மம்
மகம்: உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர். பூரம்: சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். மனம் தெளிவடையும். உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்வீர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
கன்னி
உத்திரம் 2,3,4: பணியிட பிரச்னை விலகும். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். துணிவுடன் செயல்படுவீர்கள். சித்திரை 1,2: தொழிலில் உங்களுக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.
துலாம்
சித்திரை 3,4: வருவாயால் வளம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும். விசாகம் 1,2,3: முயற்சியில் வெற்றி காண்பீர். கடன் கொடுத்த பணம் திரும்ப வரும்.
விருச்சிகம்
விசாகம் 4: வியாபாரத் தடை விலகும். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். கேட்டை: வெளியூர் பயணத்தில் நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.
தனுசு
மூலம்: மகிழ்ச்சியான நாள். இடம், பொருள் அறிந்து செயல்படுவீர். பூராடம்: உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்திராடம் 1: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.
மகரம்
உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். மதியத்திற்கு மேல் செலவு தோன்றும். திருவோணம்: எதிர்பார்த்த பணம் வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. அவிட்டம் 1,2: பணியிட பிரச்னை தீரும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
கும்பம்
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாய நிலை ஏற்படும். எதிர்பார்த்த வரவு வரும். சதயம்: நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூரட்டாதி 1,2,3: நிதிநிலை உயரும். வாழ்க்கைத்துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையாகும்.
மீனம்
பூரட்டாதி 4: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். சகபணியாளரின் ஆதரவு கிடைக்கும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். ரேவதி: உதவி செய்வதாக சொன்னவர்கள் தேடி வந்து செய்வர். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
(வீடியோ இங்கே )