இன்றைய ராசிபலன் (14.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (14.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: மற்றவரால் செய்யமுடியாத ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். பரணி: எந்தவொரு வேலையிலும் உங்கள் நேரடிப்பார்வை அவசியம். வழிபாட்டில் பங்கேற்பீர். கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்வீர். வரவேண்டிய பணம் வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். ரோகிணி: நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கவனம் தேவை. பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். மிருகசீரிடம் 1,2: மனம் குழப்பமடையும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருவாதிரை: புதிய வாடிக்கையாளரால் வருவாய் கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையில் இன்று உங்களுக்கு வெற்றியுண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். பூசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்கள். ஆயில்யம்: புதிய முயற்சியில் லாபம் காண்பீர். வியாபார போட்டியாளர் விலகுவர்.

சிம்மம்

மகம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இன்று முடிவிற்கு வரும். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உத்திரம் 1: நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலை இன்று முடியும். 

கன்னி

உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். அஸ்தம்: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன்களை அடைப்பீர். சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். சுவாதி: உடல்நிலை சீராகும். சொத்து சம்பந்தமான சிக்கல் முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழப்பர். 

விருச்சிகம்

விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். அனுஷம்: பூர்வீக சொத்து பிரச்னைகள் முடியும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர். பூராடம்: எந்த ஒன்றிலும் கையெழுத்திடும்முன் படித்துப் பார்ப்பது நன்மையாகும். உத்திராடம் 1: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும். திருவோணம்: உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். மனம் குழப்பமடையும். அவிட்டம் 1,2: எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வாகனத்தால் செலவு தோன்றும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட நாளாக இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். சதயம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்களின் செல்வாக்கு வெளிப்படும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் தோன்றிய குழப்பம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: நினைப்பது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!