இன்றைய ராசிபலன் (15.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (15.02.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியான விவகாரம் முடிவிற்கு வரும். பரணி: வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். கார்த்திகை 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எடுத்த வேலை வெற்றியாகும். ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்களுக்கு மேலானவர்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை: பணியிடத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 

கடகம் 

புனர்பூசம் 4: பிறரை அனுசரித்துச் சென்று எதிர்பார்த்ததை அடைவீர். தேவையான வருவாய் வரும். பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். ஆயில்யம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். 

சிம்மம் 

மகம்: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூரம்: பகைவர்களின் தொல்லை நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்திரம் 1: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர். 

கன்னி 

உத்திரம் 2,3,4: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர்கள். சித்திரை 1,2: பணியிட பிரச்னை தீரும். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். 

துலாம் 

சித்திரை 3,4: நன்மையான நாள். எதிர்காலம் பற்றிய எண்ணம் மனதில் உண்டாகும். சுவாதி: தாய்வழி உறவுகளால் வேலைகள் நடந்தேறும். அலைச்சல் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம். 

விருச்சிகம் 

விசாகம் 4: எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். அனுஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். கேட்டை: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். 

தனுசு

மூலம்: மனதில் தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மதிப்பு உயரும். உத்திராடம் 1: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர். 

மகரம் 

உத்திராடம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழில் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருவோணம்: மனம் குழப்பமடையும். புதிய வேலைகளைத் தவிர்ப்பது நன்மையாகும். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள். 

கும்பம் 

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சதயம்: வியாபாரம் விருத்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பூரட்டாதி 1,2,3: செலவு அதிகரித்தாலும் நடக்க வேண்டிய வேலைகள் நடந்தேறும்.\

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். குடும்பத்தில் சுமூகமான சூழல் ஏற்படும். ரேவதி: எடுத்த வேலைகள் நடந்தேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!