கனேடிய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி - எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

#Canada #Prison #Warning #prisoner #Escape
Prasu
4 months ago
கனேடிய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி - எச்சரிக்கை விடுத்த பொலிஸார்

கனடாவின் நியூ பிரான்ஸ்விக் மாநிலத்தில் உள்ள சிறையொன்றிலிருந்து ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். இந்தக் கைதி ஓர் ஆபத்தானவர் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

35 வயதான டாட் ஜான் லூயிஸ், சிறை வளையத்தைத் தாண்டி ஓடிவிட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கைதி மொன்ட்கோன் பகுதியில் இருக்கக்கூடும் என் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும், கைதி ஆபத்தானவர் எனவும் அவரை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4