பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

#Arrest #Murder #Prison #England #SriLankan
Prasu
3 months ago
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

பிரித்தானியாவில் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

37 வயதான திசாரா வெரகல என்பரே மேற்படி தண்டனையை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ம் திககியன்று, கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில், நிரோதா நிவுன்ஹெல்லா என்ற குற்றவாளியின் முன்னாள் மனைவியை திசாரா வெரகல கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு இலங்கையில் திருமணம் முடித்து பின்னர் பிரித்தானியாவிற்கு குடிப்பெயர்ந்துள்ளனர்.

அங்கு வசித்த காலப்பகுதியில் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிரோதா அவரிடம் இருந்து விலகி இருந்த நிலையில், வேறு ஒரு ஆணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சந்தேகநபர் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான கத்தியால் அந்தப் பெண்ணைக் குத்தி படுகொலை செய்துள்ளார்.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4