ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்த குழந்தை

#Death #Flight #France #baby
Prasu
3 months ago
ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்த குழந்தை

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் விமானப் பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு அழைத்து வரப்பட்டிருந்த இந்த குழந்தை, நைரோபியில் இருந்து பரிஸ் நோக்கி புறப்பட்ட விமானத்தில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விமான குழு நடைமுறைக்கு ஏற்ப அவசர சேவையை தொடர்பு கொண்டதுடன், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் உடனடியாக உதவ முனைந்தனர். 

எனினும், அவர்களின் முயற்சிகள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.

பின்னர் குறித்த விமானம் பரிஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4