கியூபாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்ப திட்டமிடும் கனடா

#Canada #government #Aid #Cuba
Prasu
2 weeks ago
கியூபாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்ப திட்டமிடும் கனடா

கனடிய அரசாங்கம் கியூபாவிற்கு உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் எண்ணெய் தடையால் கியூபாவில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார அழுத்தம் கரீபியன் தீவு நாட்டின் கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்கக்கூடும் என டிரம்பிற்கு நெருக்கமான அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மெக்ஸிகோ கியூபாவுக்கு உணவு மற்றும் மருந்துகள் அடங்கிய மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புளொக் கியுபிகோ மற்றும் என்.டி.பி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டாவாவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கியூபாவுக்கு உதவுவதற்கான திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது என கனேடிய வெளிநாட்டு விவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

எனினும், திட்டம் தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என கூறியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!