சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க திட்டமிடும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்
#Actor
#TamilCinema
#Director
#company
#Movie
Prasu
2 months ago
தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவரது 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிப்பு மற்றும் இயக்குநரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய பாதையில் பிரதீப் ரங்கநாதன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை சினிமாத்துறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் கதை பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )