கனடாவில் இடைநிலை பாடசாலைக்கு வந்த வெடி குண்டு மிரட்டல்
#School
#Canada
#Bomb
#Threat
Prasu
2 months ago
கனடாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள ஓக்ரிட்ஜ் இடைநிலை பாடசாலைக்கு வந்த குண்டு மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
நகரின் மேற்கு பகுதியிலுள்ள ஒரு பாடசாலைக்கு குண்டு மிரட்டல் உள்ளடங்கிய மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
தற்போது காவல்துறையினர் பள்ளி கட்டிடத்தின் உள்ளும் புறமும் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாடசாலையை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலையில் நடைபெற இருந்த விளையாட்டு போட்டியுடன் இந்த மிரட்டல் தொடர்புடையதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால் அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் புதிய திகதியில் நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
(வீடியோ இங்கே )