வெளியீட்டிற்கு முன்பே 63 கோடி வசூலித்த யாஷின் 'டாக்சிக்'
#Tamil Nadu
#TamilCinema
#Collection
#Movie
Prasu
1 day ago
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படத்தை தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோ, எஸ் பிக்சர்ஸ், ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
தமிழக விநியோக உரிமை கிட்டத்தட்ட ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )