மத்திய கிழக்கின் 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை

#America #Israel #Iran #IranVsIsrael
Soruban
3 weeks ago
மத்திய கிழக்கின் 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ஆளில்லா வானூர்திகள் தாக்கியுள்ளன.

இதன் விளைவாக சிறு அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் கட்டடத்திற்கு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!