அலி கமேனியின் மறைவு : ஈரான் உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் மொஜ்தபா கமேனி!

#Death #America #world_news #Israel #War #Iran #Iraq #ImportantNews #leader #IranVsIsrael
Lakhi
3 weeks ago
அலி கமேனியின் மறைவு : ஈரான் உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் மொஜ்தபா கமேனி!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதை (பெப்ரவரி 28) ஈரான் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் மிக உயரிய அதிகார பீடத்திற்கு அடுத்ததாக வரப்போவது யார் என்ற விவாதம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei), ஈரானின் அடுத்த உச்ச தலைவராக நியமிக்கப்படலாம் என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அவர் திரைக்குப் பின்னாலிருந்து ஈரானின் முக்கிய முடிவுகளை எடுத்து வந்தவர் என்பதும், பாதுகாப்புப் படையினருடன் நெருக்கமான உறவைக் கொண்டவர் என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த வாரிசு அரசியல் நியமனத்திற்கு, ஈரானுக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 1979 புரட்சியின் போது மன்னராட்சியை வீழ்த்தி உருவாக்கப்பட்ட குடியரசு தத்துவத்திற்கு அமைய, தந்தைக்குப் பிறகு மகன் ஆட்சிக்கு வருவது முரணானது என்று மதகுருமார்கள் தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிகார இடைவெளியைத் தவிர்க்க மொஜ்தபா கமேனியின் பெயர் அவசரமாக முன்னிறுத்தப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!