சுவிற்சர்லாந்தில் 2030ம் ஆண்டு வெளியாகும் புதிய காசுத்தாள்கள்

#Switzerland #Bank #government #national #currency #L4
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் 2030ம் ஆண்டு வெளியாகும் புதிய காசுத்தாள்கள்

சுவிற்சர்லாந்து தேசிய வங்கி(SNB) நடாத்திய புதிய காசுத்தாள் வடிவமைப்புப் போட்டியில் Emphase GmbH நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

Emphase GmbH அளித்திருந்த வடிவமைப்பும் கருத்துருக்கோட்பாடும் பல கட்டங்களாக நடைபெற்ற சுவிற்சர்லாந்திற்கான புதிய தாளினை வடிவமைப்பு செய்யும் போட்டியில் சிறந்த மொத்த மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

சுவிற்சர்லாந்து நாடும் மற்றும் அதன் உயர்ந்த நிலப் பகுதிகளும் என்ற கருப்பொருளை கருத்துருக் கோட்பாடாகக்கொண்டு மிகவும் நம்பத்தகுந்த வகையில் வடிவமைப்புக் காட்சி சுவிற்சர்லாந்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது. 

இந்த வடிவமைப்பு புதிய நாணயங்களாக மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து அரசின் தேசிய வங்கி புதிய நாணயத் தொடரின் வரைவியல்சார் மேம்பாட்டுப் பணிகளை Emphase GmbH நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. 

images/content-image/1772655611.jpg

இறுதி நாணய வடிவமைப்பு போட்டியில் கையளிக்கப்பட்ட வடிவமைப்பிலிருந்து பதிப்பின்போது தாள்கள் கணிசமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசுத்தாள்களின் இறுதி வடிவமைப்பை சேசிய வங்கியின் நிர்வாகசபை (Bankrat) தீர்மானிக்கும். புதிய நாணயங்கள் 2030களின் தொடக்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்காக முன்னளிக்கப்பட்ட 12 வடிவமைப்புகள் மார்ச் 5 முதல் 15 வரை சூரிச்சில் உள்ள தேசிய வங்கியின் மன்றத்தில் (Fraumünsterstrasse 8) நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் சுவிற்சர்லாந்து தேசிய வங்கி தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

புதிய நாணயத் தொடரின் வளர்ச்சியைப் பற்றிய விரிவான தகவல்களும், அனைத்து 12 வடிவமைப்புகளும் சுவிற்சர்லாந்து தேசிய வங்கியின் இணையதளத்தில் பார்வைக்கு கிடைக்கின்றன: https://www.snb.ch/de/the-snb/mandates-goals/cash/series-10 .

images/content-image/1772655624.jpg

புதிய நாணயங்களுக்கான வடிவமைப்புகள் குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. “விளையாட்டு பணம் போல இருக்கிறது” என சிலர் கருத்தும் பகிர்ந்திருந்தனர், “சுவிற்சர்லாந்து நாட்டிற்கு இவ்வரைவுகள் மிகவும் பொருத்தமானது” எனவும் இன்னொரு சாரார் பாராட்டினர். 

பொதுமக்கள் விருப்பமான கருத்து K-I நிறுவனத்தின் வடிவமைப்பினை விரும்பியதாகத் கவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடுவர்கள் Emphase GmbH நிறுவனத்தின் வடிவமைப்பினை அறுதியாகத் தெரிவுசெய்துள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான பொறிகள் உள்ளிட்ட சில தொழில்நுட்ப மாற்றங்கள் சேர்க்கப்பட வேண்டியதால் இறுதி வடிவமைப்பில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சுவிற்சர்லாந்தின் புதியதாள்கள் 2030 இல் மக்கள் கைகளில் புழங்கும்  

பதிவு -சிவமகிழி

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!