கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்
#Canada
#Murder
#Women
#Social Media
#Indian
Prasu
3 hours ago
இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பின்னணி கொண்டவரான 45 வயது நான்சி க்ரெவால், மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்..
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் சென்ற மருத்துவ உதவிக்குழுவினர் நான்சியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நான்சி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகப் பிரபலமான நான்சி, இந்தியா கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் இந்திய அரசியல், குறிப்பாக, தான் சார்ந்த பஞ்சாப் அரசியல் குறித்த கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )