சரணடைதலை தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை - டிரம்ப் உறுதி
#America
#Attack
#Country
#War
#Iran
#ceasefire
#L4
Prasu
6 hours ago
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் "நிபந்தனையற்ற சரணடைதல்" மட்டுமே எதிர்ப்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், " சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது" என்று டிரம்ப் தனது உண்மை சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாட்டிற்கு யார் நல்லத் தலைவராக இருக்கமுடியும் என்பதற்கு தன்னிடம் சில யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
'சரணடைந்த பிறகு, ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரை தேர்ந்தெடுத்து அமெரிக்காவும், அதன் அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டணிகளும் மற்றும் பங்காளிகளும், ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்' எனவும் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )