ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ரஷ்ய ஜனாதிபதி

#world_news #Israel #President #Iran #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர், பிற அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததற்கு ரஷ்ய ஜனாதிபதி தனது இரங்கலைத் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், இராஜதந்திர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் புடின் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு பெஸ்கோவ் நன்றி தெரிவித்து, ஈரானின் தற்போதைய நிலைமை குறித்த விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் தொடர்ச்சியான தகவல் தொடர்பைப் பேண ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!