நூலிழையில் உயிர் தப்பிய ஈரானின் புதிய உச்ச தலைவர்
ஈரானின் முன்னாள் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அதே அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில், ஈரானின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள அவரது மகன் முஜ்தபா கமேனியும் (Mojtaba Khamenei) படுகாயமடைந்துள்ளதாக பிபிசி, ரொய்ட்டரஸ் உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.
உலகத்தின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு வந்த இந்தப் பகீர் உண்மையை, ஈரானிய அரச ஊடகமே தற்போது தவறுதலாக வெளிப்படுத்தியுள்ளது.
அரச ஊடகம் வெளிப்படுத்திய 'ஜான்பாஸ்' இரகசியம்
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரானியத் தலைவரின் பிரதான பதுங்கு குழி (Bunker) மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட அதிபயங்கரத் தாக்குதலில் இருந்து மொஜ்தபா கமேனி நூலிழையில் உயிர் தப்பிய போதிலும், அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
புதிய தலைவரை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் போது, ஈரானிய அரச ஊடகம் அவரை "ரமழான் போரின் ஜான்பாஸ்" (Jaanbaz of Ramadan War) என வர்ணித்துள்ளது.
பாரசீக மொழியில் 'ஜான்பாஸ்' என்பது எதிரிகளின் தாக்குதலில் காயமடைந்த ஒரு போர்வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.
இந்த ஒற்றை வார்த்தையின் ஊடாக, புதிய தலைவரின் காயப்பட்ட நிலையை ஈரான் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
கண்ணுக்குத் தெரியாத தலைவர்:
அதிகரிக்கும் மர்மம் அதியுயர் தலைவராகப் பதவியேற்றதன் பின்னர், மொஜ்தபா கமேனி இதுவரை மக்கள் முன்னிலையிலோ அல்லது எந்தவொரு பகிரங்க ஊடக வெளியீட்டிலோ தோன்றவில்லை.
அவரது புதிய புகைப்படங்கள் அல்லது காணொளிகள் எவையும் இதுவரை அரச ஊடகங்களால் வெளியிடப்படவில்லை.
அவர் பொதுமக்களைச் சந்திக்க முடியாத அளவிற்குப் படுகாயங்களுடன் இரகசியமான இடமொன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருவதையே இந்த மர்மமான மௌனம் சுட்டிக்காட்டுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"தலைவர் பாதுகாப்பாக உள்ளார்" என ஈரான் நாடகமாடினாலும், நிஜத்தில் ஈரானியப் படைகள் காயப்பட்ட ஒரு தலைமையின் கீழ் தான் தற்போதைய போரை முன்னெடுத்து வருகின்றன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் நேரடி எச்சரிக்கை
மொஜ்தபா கமேனியின் நியமனத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளார். "அவர் ஒரு தகுதியற்ற தெரிவு; அமெரிக்காவின் அனுமதியின்றி அவர் அதிக காலம் குறித்த பதவியில் நீடிக்கப் போவதில்லை" என ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறுபுறம், ஈரானின் எந்தவொரு புதிய தலைவரும் தமக்கு இலக்கே (Target for elimination) என இஸ்ரேலியப் பாதுகாப்புத் தரப்பும் சூளுரைத்துள்ளது.
இதனால், காயப்பட்ட நிலையிலும் மொஜ்தபா கமேனி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தீவிர தேடுதல் வேட்டைக்கு இலக்காகியுள்ளார்.
(வீடியோ இங்கே )