அமெரிக்காவை சார்ந்த ஏற்றுமதி – கனடா பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்!

#Canada #America #world_news #Export #economy #ImportantNews
Lakhi
3 hours ago
அமெரிக்காவை சார்ந்த ஏற்றுமதி – கனடா பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்!

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட முழுநேர வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. இது பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தொழிலாளர் புள்ளிவிவரங்களின்படி, கனடாவின் வேலையின்மை வீதம் 6.7 வீதமாக உயர்ந்துள்ளது. இது ஜி7 நாடுகளில் பிரான்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த அளவாகும். கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, பெப்ரவரி மாதத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வேலைவாய்ப்புச் சரிவு இதுவாகும். இதில் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளே மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் வாகனங்கள், உருக்கு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் மீது விதித்துள்ள வரிகள், கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கனடா-அமெரிக்கா-மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தமான ருளுஆஊயு, இந்த ஆண்டு கட்டாய மறுஆய்வுக்கு உள்ளாகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது தனித்தனி வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கவோ ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதால், வர்த்தகச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை முதலீடுகளை முடக்கியுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும், தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தை விட வேலையின்மை வீதம் தற்போது குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொயிலியேவ், கனடாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் கார்னியின் தவறான நிர்வாகமே காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார்.

இது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அவர் விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். கனடாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி அமெரிக்காவையே சார்ந்துள்ளதால் (சுமார் 67 வீதம்), அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளுக்கு கனடா மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடாக உள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!