நேபாளத்தில் வாகன விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பக்தர்கள் மரணம்
#Death
#Accident
#Nepal
#Indian
#Pilgrims
#L4
Prasu
1 hour ago
நேபாளில் நடந்த வாகன விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். நேபாளில் புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத் தலமான மனகாமனா கோவில் அருகே உள்ள காந்தர் என்ற மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
மலையிலிருந்து இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த மின்சார வாகனம் சுமார் 150 முதல் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது.
இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்குத்தான மலைப்பாதையில் இறங்கும்போது மின்சார வாகனத்தின் பிரேக் சரியாக செயல்படாததே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே )