எரிபொருள் நெருக்கடியால் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
#School
#government
#Pakistan
#Fuel
#Minister
#L4
Prasu
2 hours ago
ஈரான் போரினால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் தத்தளிக்கும் பாகிஸ்தானில் இதன் தாக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
- அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் 5% முதல் 30% வரை குறைக்கப்படவுள்ளது.
- கூட்டாட்சி மற்றும் மாகாண அமைச்சர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தங்களது ஊதியம் மற்றும் இதர படிகளை முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 25% குறைக்கப்படவுள்ளது.
- அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- 60% அரசு வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்.
- வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாள். 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.
- மேலும், ஜூன் 2026 வரை புதிய வாகனங்கள், ஏசி மற்றும் தளபாடங்கள் வாங்குவதற்கு முழுத் தடை.
- மின்சாரம் மற்றும் எரிபொருள் சேமிப்பிற்காகப் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூட அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும்.
(வீடியோ இங்கே )