சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடந்த விபத்தில் 61 வயது பெண் மரணம்

#Death #Switzerland #Accident #Women #Snow #L4
Prasu
3 hours ago
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடந்த விபத்தில் 61 வயது பெண் மரணம்

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள எங்கல்பர்க் பனிச்சறுக்கு ரிசார்ட்டில், பனி மூடிய மலையிலிருந்து ஒரு பனிச்சறுக்கு கோண்டோலா(பனியில் பயணிக்கும் கேபிள் கார்) கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய சுவிஸ் மாகாணமான நிட்வால்டனில் உள்ள காவல்துறையினர், இன்னும் தெளிவடையாத காரணங்களுக்காக கோண்டோலா அதன் கேபிளிலிருந்து கழன்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்தபோது, ​​மலைப்பகுதியில் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சுவிஸ் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

டிக்லிஸ் மலையிலிருந்து கோண்டோலா உருண்டு, பலமுறை புரண்டு, பின்னர் நின்றதைக் காட்டும் பரபரப்பான காணொளி வெளியாகியுள்ளது.

பலியானவர் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதுப் பெண் என்று அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!