புதைபடிவ எரிபொருள் எரிப்பு விளைவு: மனித உடலின் உள் வேதியியல் மாற்றம் கண்டுபிடிப்பு!

#SriLanka #BLOOD #world_news #Human #Body #Fuel #Warning #ImportantNews #Chemical
Lakhi
2 hours ago
புதைபடிவ எரிபொருள் எரிப்பு விளைவு: மனித உடலின் உள் வேதியியல் மாற்றம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை (CO2) அதிகளவில் கலக்கச் செய்வது, பூமியை வெப்பமாக்குவதுடன் நில்லாது, நமது உடலின் உட்புற வேதியியல் கட்டமைப்பையே (Internal Blood Chemistry) மாற்றி வருவதாக அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அவுதிரேலியாவின் 'தி கிட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' (The Kids Research Institute Australia) சுவாச சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவுத் தலைவர் அலெக்ஸ் லார்கோம் (Alex Larcombe) தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் கடந்த 20 ஆண்டுகால (1999-2020) சுமார் 7,000 பேரின் இரத்தப் பரிசோதனைத் தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. மனித பரிணாம வரலாற்றில் வளிமண்டல CO2 அளவு சுமார் 300 ppm ஆகவே நீடித்தது. ஆனால் இன்று அது 420 ppm-ஐக் கடந்துள்ளது. நாம் சுவாசிக்கும் காற்றில் CO2 அதிகரிக்கும்போது, அது இரத்தத்தில் கலந்து அமிலத்தன்மையை (Acidity) அதிகரிக்கிறது.

இதனைச் சமன் செய்ய நமது உடல் 'பைகார்பனேட்' (Bicarbonate) என்ற உப்பை அதிகளவில் உற்பத்தி செய்து தக்கவைக்கத் தொடங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மனித இரத்தத்தில் பைகார்பனேட் அளவு 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், இரத்தத்தின் அமிலத்தன்மையைக் குறைக்க எலும்புகள் அந்த அதிகப்படியான கார்பனை உறிஞ்சி 'கால்சியம் கார்பனேட்டாக' மாற்றித் தன்னுள் புதைக்கின்றன. இதன் விளைவாக இரத்தத்தில் கால்சியம் 2 சதவீதமும், பாஸ்பரஸ் 7 சதவீதமும் குறைந்துள்ளன. இதே நிலை நீடித்தால், அடுத்த 50 ஆண்டுகளில் மனித எலும்புக்கூடு, சிறுநீரகம் மற்றும் மூளைச் செயல்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என இந்த ஆய்வு எச்சரிக்கப்பட்டுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!