ஈரான் மக்களுக்காக மாத சம்பளத்தை வழங்கிய ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர்

#India #Parliament #War #Iran #Salary #Member #L4
Prasu
3 hours ago
ஈரான் மக்களுக்காக மாத சம்பளத்தை வழங்கிய  ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர்

ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சம்பளத்தை ஈரான் மக்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா பகுதி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்தான் அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ளார்.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவினார் என இவர்மீது குற்றச்சாட்டு உள்ளது. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகின்றார்.

இதற்கமைய நாடாளுமன்ற மக்களவையில் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய அவர், “தவறான கொள்கைகளால் இறந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் சாதாரண குடிமக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.

ஈரானுக்கு உதவுவதற்காக காஷ்மீர் மக்கள் முன்னெடுத்துவரும் முயற்சியையும் பாராட்டுகின்றேன். எனவே, எனது ஒரு மாத எம்.பி.க்கான அரசு ஊதியத்தை 62 மாணவிகள் உயிரிழந்த ஈரானிய பாடசாலைக்கு அனுப்ப உள்ளேன்’’ என்று குறிப்பிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!