பிரான்ஸ் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

#India #France #Minister #Lanka4 #Summit #G7 #L4
Prasu
13 hours ago
பிரான்ஸ் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

G7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். 

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் நீரிணையை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து மாநாட்டில் விரிவாக ஆராயப்படுகிறது. 

G7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், பிரான்ஸ் விடுத்த அழைப்பின் பிரகாரம் ‘கூட்டணி நாடு’ என்ற அந்தஸ்தில் இந்தியா பங்கேற்றுள்ளது. 

அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன், ஜெய்சங்கர் இரு தரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!