பெட்ரோல் ஏற்றுமதியை முற்றாக தடை செய்தது ரஷ்யா - உலக சந்தையில் அதிர்ச்சி!

#world_news #Lanka4 #Word #petrol #Market #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
பெட்ரோல் ஏற்றுமதியை முற்றாக தடை செய்தது ரஷ்யா - உலக சந்தையில் அதிர்ச்சி!

எதிர்வரும் ஏப்ரல் 1-ஆம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை வரைவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சிற்கு ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் நேற்று உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடையானது ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் டாஸ் (TASS) செய்தி நிறுவனம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, விலையில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக நோவாக் குறிப்பிட்டார்.

அதே சமயம், வெளிநாட்டுச் சந்தைகளில் ரஷ்ய எரிசக்தி வளங்களுக்கான அதிக தேவை நீடிப்பது ஒரு சாதகமான காரணியாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அளவு கடந்த ஆண்டின் மட்டத்திலேயே இருப்பதாகவும், இது எண்ணெய் பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது யுக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதாலும், எரிபொருளுக்கான பருவகால தேவை அதிகரித்ததாலும், ரஷ்யாவின் பல பிராந்தியங்களிலும் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள யுக்ரைனின் பகுதிகளிலும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் பெற்றோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா பலமுறை கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தொழில்துறை தரவுகளின்படி, ரஷ்யா கடந்த ஆண்டு சுமார் 5 மில்லியன் மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றுமதி செய்துள்ளது, இது நாளொன்றுக்கு சுமார் 117,000 பீப்பாய்களாகும்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!