18 மாத சட்டப் போராட்டத்தின் பின் அமைதியாக விடைபெற்ற இளம் பெண்

#Death #Women #Sexual Abuse #Lanka4 #Euthanasia #Spain #L4
Prasu
13 hours ago
18 மாத சட்டப் போராட்டத்தின் பின் அமைதியாக விடைபெற்ற இளம் பெண்

வன்கொடுமை மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் மனதளவில் உடைந்திருந்த ஸ்பெயினைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ, தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காகத் தந்தையுடன் நீண்டகாலமாக நடத்திய சட்டப்போராட்டத்தின் இறுதியில் கருணைக்கொலை மூலம் அமைதியாக விடைபெற்றுள்ளார்.

பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா, 2022ம் ஆண்டு கூட்டுப் பாலியல் வன்பொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 

இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றபோது அவரது இடுப்புக்கு கீழ்ப்பகுதி முழுமையாகச் செயலிழந்தது.

“நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; எனது துன்பத்தை நிறுத்த விரும்புகிறேன்” எனக் கூறி, கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துக்கொள்ள அவர் அனுமதி கோரினார்.

நோலியாவின் தந்தை தனது மகளின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மகளுக்கு ‘ஆளுமைக் குறைபாடு’ (Personality Disorder) இருப்பதாகவும், அதனால் அவரால் சரியான முடிவை எடுக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.

கத்தோலிக்க திருச்சபை மற்றும் சில கிறிஸ்தவ அமைப்புகள் தந்தைக்கு ஆதரவாக நின்றன. “துன்பத்திற்கு மரணம் தீர்வாகாது” என்றும், அரசாங்கம் அவரைச் சரியாகப் பராமரிக்கத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!