பஹ்ரைன், அமீரகத்தில் உள்ள அலுமினிய ஆலைகள் மீதான தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பு
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய ஆலைகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட ஓர் அறிக்கையில், குறிவைக்கப்பட்ட தளங்கள் அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புடையவை என்று IRGC தெரிவித்துள்ளது.
அலுமினியம் பஹ்ரைன் (Alba) நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதன் ஆலை மீதான தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்ததாகக் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA) நிறுவனம், அபுதாபியில் உள்ள அதன் ஆலைகளில் ஒன்று குறிப்பிடத்தக்க சேதத்திற்கு உள்ளானதாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளை நிறுத்திய இராணுவத் தளங்களில் இருந்து ஈரானிய தொழில்துறை உள்கட்டமைப்பு மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )