கனடாவில் தபால் மூலம் போதைப் பொருள் கடத்திய நபர் கைது

#Arrest #Canada #drugs #Lanka4 #Postal #L4
Prasu
2 hours ago
கனடாவில் தபால் மூலம் போதைப் பொருள் கடத்திய நபர் கைது

கனடாவின் ஹால்டன் பகுதியில், தபால் மூலம் கோக்கெயின் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புர்லிங்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது, 42 வயதான ட்ரவர் ஹேர்ட்மேன் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 கிராம் கோக்கெயின், அஞ்சல் அனுப்புதல் தொடர்பான ஆதாரங்கள், குறுக்கு வில், போலி வாகன எண் பலகைகள், சுமார் 70,000 சட்டவிரோத சிகரெட்டுகள், திருடப்பட்ட பிக்கப் வாகனம் என்பன சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

4 போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 2 குறுக்கு வில் வைத்திருத்தல் குற்றங்கள், 2 தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டிய குற்றங்கள் மற்றும் வாகன அடையாள எண் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!