கனடாவில் கண்டறியப்பட்ட புதிய வகை போதைப்பொருள்

#Canada #drugs #Lanka4 #Warning #Medicine #L4
Prasu
3 months ago
கனடாவில் கண்டறியப்பட்ட புதிய வகை போதைப்பொருள்

கனடாவின் டொராண்டோ நகரில் செயல்படும் போதைப் பொருள் பரிசோதனை அமைப்பு, கட்டுப்பாடற்ற பென்டனைல் போதைப் பொருள் விநியோகத்தில் புதிய வகை ஒரு மருந்துப் பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

“Nefopam” என அழைக்கப்படும் இந்தப் பொருள், பீட்டர்ப்ரோ மற்றும் கிங்ஸ்டன் பகுதிகளிள் அதிகம் உபயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 12ம் திகதி டொராண்டோ மற்றும் பீட்டர்ப்ரோ நகரங்களில் சேகரிக்கப்பட்ட பென்டனைல் மாதிரிகளில் இது முதன்முதலாக கண்டறியப்பட்டது. 

மார்ச் 12 முதல் 25 வரை பரிசோதிக்கப்பட்ட 102 பென்டனைல் மாதிரிகளில் 12 மாதிரிகளில் nefopam இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ போதைப் பொருள் பரிசோதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

Nefopam என்பது பொதுவாக மிதமானது முதல் கடுமையான வலிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு வலி நிவாரணியாகும். 

இது Acupan என்ற பெயரில் சில நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலிகளை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4