மறைந்த ஈரான் ராணுவ தளபதியின் குடும்பத்தினர் அமெரிக்காவில் கைது
#Arrest
#America
#Lanka4
#Iran
#Military
#family
#Commander
Prasu
3 hours ago
ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதியாக இருந்த காசிம் சுலைமானி 2020ம் ஆண்டு பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த காசிம் சுலைமானியின் மருமகள் ஹமீதா சுலைமானி அப்ஷர் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹமீதா மற்றும் அவரது மகள் தற்போது குடிவரவு அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளனர். விரைவில் அவர்கள் ஈரானுக்கு நாடுகடத்தப்பட உள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மார்கோ ரூபியோ, அவர் சுலைமானியின் உறவினர் மட்டுமல்ல, ஈரான் அரசின் தீவிர ஆதரவாளர்.
அமெரிக்காவை சாத்தான் என்று அழைத்தவர்களுக்கும், அமெரிக்க எதிர்ப்புப் போக்கு கொண்டவர்களுக்கும் டிரம்ப் ஆட்சியில் இடமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )