நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு விலை

#SriLanka #prices #Laugfs gas #Litro Gas
Soruban
3 months ago
நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு விலை

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள இறக்குமதி செலவுகளை கருத்திற்கொண்டு, நாட்டிலும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (5)அறிவித்தன.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை: 1,070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 5,700 ரூபாய். 5 கிலோ கிராம்: 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 2,280 ரூபாய்.

இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

12.5 கிலோ கிராம்: 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 4,765 ரூபாய்.5 கிலோ கிராம்: 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 1,910 ரூபாய். 2.3 கிலோ கிராம்: 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 890 ரூபாய்.

எரிபொருள் கப்பல்கள் வருகை மற்றும் டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த சாதகமான செய்திகளுக்கு மத்தியில், சமையல் எரிவாயுவின் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலதிக சுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4