கூட்டணி குறித்து மரிக்கார் எம்.பி வெளியிட்ட அதிரடித் தீர்மானம்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
கூட்டணி குறித்து மரிக்கார் எம்.பி வெளியிட்ட அதிரடித் தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்கினார்:"நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக் கொள்வோம்.

தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டிற்கு வருகிறோம். 

அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?" என அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப வீடு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்கினார்: "நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக் கொள்வோம். 

தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டிற்கு வருகிறோம். 

அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?" என அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப வீடு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப்போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

"மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இவ்வாறான நிலையில், அவர்களுடன் எம்மால் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்?" நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்கிய தரப்பினரைத் தவிர்த்து, தமது அரசியல் கொள்கையுடன் ஒத்துப்போகும் தரப்புடன் மாத்திரமே இணைந்து பயணிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் விளக்கமளித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4