லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 89 பேர் உயிரிழப்பு

#Death #Attack #Missile #Lanka4 #Iran #Lebanon #L4
Prasu
2 hours ago
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 89 பேர் உயிரிழப்பு

லெபனானில் பல பகுதிகளிலும் இஸ்ரேல் இன்று நடத்திய உக்கிர தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர். 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இது தொடர்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இஸ்ரேலும் இதற்கு இணங்கியுள்ளது. குறித்த போர் நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் போர் நிறுத்தம் லெபனான் விவகாரத்தில் தொடர்புபடாது எனக் குறிப்பிட்டு, அங்கு இஸ்ரேல் இன்று உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது.

இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போர் விதி மீறல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!