வீதி சமிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு யாழில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு
#SriLanka
#Jaffna
#people
#Road
#Lanka4
#Rule
Prasu
1 hour ago
அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்கை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

இதன்போது சந்தியிலுள்ள சமிக்கையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இவர்கள் வித்தியாசமான முறையில் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




(வீடியோ இங்கே )