அமெரிக்காவுடனான முக்கிய ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிரித்தானியா
#PrimeMinister
#America
#government
#Lanka4
#England
#Agreement
Prasu
1 hour ago
அமெரிக்காவின் உறுதிப்படுத்தல் தாமதமானதைத் தொடர்ந்து, சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை பிரித்தானியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
முன்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் அதனை ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரமர் ஸ்டார்மரை வலியுறுத்தியிருந்தார்.
பிரித்தானிய பிரதேசத்தின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு வழங்கும் இந்த ஒப்பந்தத்தை தாங்கள் முழுமையாகக் கைவிடவில்லை என்றும் ஆனால் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலவகாசம் முடிந்துவிட்டது என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மே மாத நடுப்பகுதியில் நடைபெறும் மன்னரின் உரையில் ஒரு புதிய சாகோஸ் சட்டமூலம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
(வீடியோ இங்கே )