பிரான்சில் 2024 முதல் வேனுக்குள் பூட்டப்பட்டிருந்த 9 வயது சிறுவன் மீட்பு

#Arrest #France #Lanka4 #Rescue #vehicle #2024
Prasu
2 months ago
பிரான்சில் 2024 முதல் வேனுக்குள் பூட்டப்பட்டிருந்த 9 வயது சிறுவன் மீட்பு

கிழக்கு பிரான்சின் ஹேகன்பாக் கிராமத்தில், நவம்பர் 2024 முதல் தனது தந்தையின் வேனுக்குள் பூட்டப்பட்டிருந்த 9 வயது சிறுவனை பிரெஞ்சு காவல்துறை மீட்டுள்ளது. 

மெட்ரோவின் அறிக்கையின்படி, நீண்டகால அடைப்பின் காரணமாக நடக்கும் திறனை இழந்திருந்த அந்தச் சிறுவன், நிர்வாணமாகவும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைவுடனும் மீட்கப்பட்டுள்ளார்.

வேனை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது, ​​"குப்பைக் குவியலின் மீதும் மலத்திற்கு அருகிலும், ஒரு போர்வையால் மூடப்பட்டு, நிர்வாணமாக ஒரு குழந்தையை காவல்துறை கண்டதாக அரசு வழக்கறிஞர் நிக்கோலஸ் ஹெய்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வேனிலிருந்து ஒரு குழந்தையின் சத்தம் வருவதைக் கேட்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் மேட்கப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வாகனம், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அருகிலுள்ள ஹேகன்பாக் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4