மேத்யூ பெர்ரி மரண வழக்கு: கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

#Death #world_news #Queen #ImportantNews #Case
Lakhi
3 hours ago
மேத்யூ பெர்ரி மரண வழக்கு: கெட்டமைன் ராணிக்கு' 15 ஆண்டுகள் சிறை!

உலகப்புகழ் பெற்ற 'Friends' தொடரின் நாயகன் மேத்யூ பெர்ரியின் (Matthew Perry) மரணத்திற்கு காரணமான போதைப்பொருள் விநியோகஸ்தர் ஜஸ்வீன் சங்காவுக்கு (Jasveen Sangha) அமெரிக்க நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 42 வயதான ஜஸ்வீன் சங்கா, லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செல்வந்தர்களுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு "பேரங்காடியையே" (Drug Emporium) நடத்தி வந்துள்ளார்.

இவரது வீட்டில் இருந்து நூற்றுக்கணக்கான கெட்டமைன் குப்பிகள், கொக்கேயின் மற்றும் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் தனது வீட்டில் உள்ள குளியல் தொட்டியில் மேத்யூ பெர்ரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் 'கெட்டமைன்' எனும் போதைப்பொருளை அதிகப்படியாகப் பயன்படுத்தியதாலேயே உயிரிழந்தமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், மேத்யூ பெர்ரியின் உறவினர்கள் நீதிமன்றத்தில் ஆற்றிய உருக்கமான உரையைக் கேட்டு ஜஸ்வீன் கதறி அழுதார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!