எதிர்ப்பார்ப்புக்களுடன் ஆரம்பமாகும் இந்துச் சகோதரர்களின் பெரும் போர்!
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் பிரபல பெரும் துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான "இந்துச் சகோதரர்களின் பெரும் போர்" எதிர்வரும் 30 மற்றும் மே 1 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதாக குறித்த போட்டியின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த பெரும் போர் இம்மாதம் 30 மற்றும் மே 1 ஆகிய திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த இரு பெரும் போர்களும் இரு அணிகளும் சம அளவில் திறமைகளை வெளிக்காட்டி இருந்த நிலையில் சம நிலையில் வெற்றி தோல்வி இன்றி நிறைவுற்றது.
குறித்த கிரிக்கெட் போர் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இரு இந்துக் கல்லூரிகளினதும் அதிபர் மற்றும் துடுப்பாட்ட அணிகளினது தலைவர்கள் பங்கேற்புடன் இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்தனர்.
இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், சகோதரத்துவத்தையும் வாழ்க்கைக்கான மனிதநேயம் மிக்க பண்புகளையும் வலுவாக்கும் நோக்குடனும் கிரிக்கெற் துறையை தொழில்துறை நோக்கிய பரிமாணத்தக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த தொடரை இரு பாடசாலைகளும் இணைந்து மூன்றாவது ஆண்டாகவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரு வருடங்களின் அனுபவங்களை கொண்டு இம்முறை மேலும் மெருகூட்டலுடன் இம்முறை நடைபெறவுள்ள இந்த தொடரில் இரு அணிகளும் வலுவான வீரர்களையும் அர்களது அற்றலை வெளிக்கொண்டுவரும் களமாகவும் இதை பயன்படுத்த இருக்கின்றனர்.
இந்த தொடருக்கு இரு பாடசாலைகளது பயிற்சியாளர்களும் தமது பாடசாலைகளின் வெற்றிக்கான வியூகங்களை மேற்கொண்டுவரும் நிலையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய நாள்களில் ரசிகர்களுக்கு நட்பு ரீதியான திறமைகளை காண்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.