இன்று வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்!

#today #Climate #HeavyRain #ImportantNews #L4
Lakhi
2 months ago
இன்று வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும். இதேவேளை சூரியன் வடதிசை நோக்கி நகர்வதால்,எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளில் அது நேர் உச்சியில் இருக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4